Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2024 ஆம் ஆண்டிற்கான She Shore காலண்டர் வெளியீடு!

2024 ஆம் ஆண்டிற்கான She Shore காலண்டர் வெளியீடு!
, திங்கள், 1 ஜனவரி 2024 (11:32 IST)
சென்னை தி.நகரில், 2024 ஆம் ஆண்டிற்கான  She Shore காலண்டரை ஃபேஷன்  துறையில் இரண்டு தலைமுறைகளாக கோலோச்சி வரும் டாக்டர் லதா கிருஷ்ணா தாஸ்,விஜயகுமார், விக்கி கபூர், ஜெசிக்கா வெளியிட்டனர்.


சென்னையின் கடற்கரைகளை மையமாக வைத்து 2024 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர் உருவாக்கப்பட்டு  வெளியிடப்பட்டது. இந்த காலண்டருக்கான புகைப்படங்களை சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் விஜயகுமார் படம் பிடிக்க, ஆடை வடிவமைப்பை பிரபல பேஷன் டிசைனர் விக்கி கபூர் செய்துள்ளார்.

 பகழ்பெற்ற ஒப்பனை கலைஞர் ஜெசிக்காவின் கைவண்ணத்தில் மிருதுளா, ஷாலினி, அபிநயா,  அனன்யா சிங் ராஜ்புத், வர்ஷினி, பிரியா, டோலிஐஸ்வர்யா, ஆகிய சென்னையைச் சேர்ந்த மாடல்கள் புகைப்படங்களில் பங்கேற்றனர். பத்து நாட்கள் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் இந்த காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜயகுமார், விக்கி கபூர், ஜெசிக்கா கூட்டணியில் கடந்த ஆண்டு பாரிஸ் நகரின் தீம் கொண்டு காலண்டர் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டில் தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!