Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடிய விடிய மழை: அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (06:39 IST)
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாகனங்கள் சாலையில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 48 மிமீ மழையும், தரமணியில் 38 மிமீ மழையும், சென்னை விமான நிலையத்தில் 50 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் கனமழையும், நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments