சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Siva
ஞாயிறு, 17 நவம்பர் 2024 (09:57 IST)
சென்னையில் கடந்த சில நாட்களில் லேசான மழையிலிருந்து மிக கனமழை வரை பதிவான நிலையில், அடுத்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை கிடையாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் இன்றுதான் சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, அதன் பின்னர் மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை என பிரதீப் ஜான் கூறினார். ஆனால், இன்று மற்றும் நாளை, டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை இருக்கும் எனவும் குறிப்பாக ஈரோடு, நீலகிரி, மேற்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடைந்து விடவில்லை, மேலும் பருவமழையின் போது தமிழகத்தில் இன்னும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் தமிழகத்தை நோக்கி ஒரு புயல் வரக்கூடும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
அந்த புயல் அதிக தீவிரம் அடையுமா, அதற்கு பெயர் வைக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பதைக் கணிக்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments