Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் தம்பதியினர் கொலை; 1000 சவரன் நகைக் கொள்ளை! – சென்னையில் விபரீதம்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (11:17 IST)
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த வெளிமாநில தொழிலதிபரை கொன்ற வழக்கில் கைதான டிரைவர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலணி பகுதியில் சொகுசு வீட்டில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா. குஜராத்தில் பிரபலமான ஐடி கம்பெனியை நடத்தி வந்த இவர், ஆடிட்டராகவும் இருந்துள்ளார்.

இவரிடம் பதம்லால் கிருஷ்ணா என்பவர் டிரைவராக நீண்ட நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்கள் முன்னதாக ஸ்ரீகாந்த் தனக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்று ரூ.40 கோடி பணம் வைத்திருந்தது பதம்லால் கிருஷ்ணாவுக்கு தெரிய வந்துள்ளது.

அதை திருட பதம்லால் அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவியுடன் திட்டமிட்டுள்ளார். பின்னர் சம்பவத்தன்று வீட்டிற்குள் நுழைந்த இருவரும் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். பின்னர் அலமாரியை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் வேறொறு லாக்கரில் ஆயிரம் சவரன் நகை, வெள்ளி பிஸ்கட்டுகள் இருப்பதை கண்ட அவர்கள் அதை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்குள் போலீஸார் சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்ற இருவரையும் ஆந்திர போலீஸ் உதவியுடன் ஓங்கோல் பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகைகள், வெள்ளி பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிடிபட்ட பதம்லாலிடம் விசாரணை மேற்கொண்டபோது, இந்த கொள்ளை சம்பவத்திற்காக நீண்ட காலமாக திட்டமிட்டதாகவும், 10 நாட்களுக்கு முன்பே தம்பதிகளை கொன்று புதைப்பதற்கு குழி வெட்டி தயாராக வைத்திருந்ததாகவும் கூறியது போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர்.. டிரம்ப் புகழாரம்..!

சென்னையில் தேவா இசை நிகழ்ச்சி: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைப்பு.. அமெரிக்க அரசு ஒப்புதல்..!

இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்: மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments