Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லைடு ப்ளேட் போட்டு போக்கு காட்டும் ரேஸர்ஸ்! – சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:54 IST)
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் பலர் ஸ்லைடு நம்பர் ப்ளேட்டை பயன்படுத்தும் நிலையில் சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் சாலைகளில் பைக் ரேஸ் செய்யும் இளைஞர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சாலைகளில் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க சென்னை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலும் இப்படியாக ரேஸ் செய்பவர்களை வண்டியின் நம்பர் ப்ளேட்டை கொண்டு கண்டுபிடித்து விடலாம். ஆனால் ரேஸ் பைக்கர்கள் சமீப காலமாக ஸ்லைடிங் நம்பர் ப்ளேட்டை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நம்பரை மறைய வைக்க முடியும் என்பது அவர்களை பிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாய் உள்ளது.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள சென்னை போலீஸார் அண்ணாசாலை மற்றும் ஆலந்தூரில் செயல்பட்டு வந்த ஸ்லைடிங் நம்பர் போர்டு விற்கும் கடை உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ஸ்லைடிங் நம்பர் போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments