Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் சிட்டிசன் பட பாணியில் கூகுள் மேப்பில் காணாமல் போன சென்னை!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (03:55 IST)
அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் 'அத்திப்பட்டி' என்ற கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதுபோலவே கடந்த சில மணிநேரங்களாக கூகுள் மேப்பில் சென்னைக்கு பதிலாக கோவூர் என்று இருந்ததால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 


கூகுள் தேடுதலில் சென்னையை தேடியபோது கூகுள் மேப்பில் சென்னைக்குப் பதிலாக கோவூர் என்று காட்டியதாக புகைப்படத்துடன் நெட்டிஸன்கள் கடந்த சில மணி நேரங்களாக பதிவு செய்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.   சினிமாவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த செய்தி மூலம் உறுதி செய்யப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் ஒருசில நிமிடங்களில் இந்த தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் 'சென்னை' என்று கூகுள் மேப்பில் வந்ததால் நெட்டிஸன்கள் நிம்மதி அடைந்தனர்

கூகுள் மேப்பில் இருந்து சென்னை நகரமே ஒருசில நிமிடங்கள் காணாமல் போனது எப்படி? என்று இதுவரை கூகுள் விளக்கம் தரவில்லை. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments