Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் பணி: கோடம்பாக்கத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:56 IST)
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கோடம்பாக்கம் (R-2) போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், ஆற்காடு சாலையில் தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 
நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள்:
 
ஆற்காடு சாலையிலிருந்து, வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்வதற்கு தடை செய்யபடுகிறது.
 
சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமி சாலை, சன்னதி சாலை மற்றும் 2 வது அவின்யூ வழியாக அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
 
துரைசாமி சாலையிலிருந்து, சன்னதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்லதடை செய்யப்படுகிறது.
 
சன்னதி தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.
 
சைதாப்பேட்டை சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களால் தடை செய்யப்படுகிறது .
 
100 அடி சர்வீஸ் சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments