Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 9 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:59 IST)
இன்று மாலை தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாளையும் சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று புதுச்சேரி காரைக்காலில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments