Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை
Webdunia
செவ்வாய், 2 மே 2023 (07:41 IST)
தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளித்து வரும் நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருவன: சென்னை, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாமக்கல், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments