Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன வானிலை மையம் தகவல்.. கோடைக்கு விடுமுறை?

Siva
வியாழன், 9 மே 2024 (13:21 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்றும் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
நேற்று அதிகாலை மட்டும் லேசான மழை பெய்ததால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்தாலும் அதன் பின் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கி விட்டது என்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வந்தாலும் சென்னையில் மழை இல்லை என்பது சென்னை மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் வெப்பம் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. 
 
அக்னி நட்சத்திர நேரத்தில் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும் தொடர்ச்சியாக வெயில் அடித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments