Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மக்களே.. வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. வானிலை மையத்தின் அதிர்ச்சி தகவல்..

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (08:14 IST)
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை மக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
எனவே சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் மற்ற பகுதிகளில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments