தமிழக மற்றும் புதுச்சேரியில் ஜூலை 1ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகம் புதுச்சேரியில் வாரம் ஜூலை 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது