Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றிரவு சென்னையில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:24 IST)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளது அடுத்து தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments