Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது மாடியில் இருந்து குதித்து சென்னை ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (12:50 IST)
சென்னையைச் சேர்ந்த ஐ டி ஊழியர் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் புவனேஷ். 27 வயதான இவ்வாறு பள்ளிக்கரணையில் குடியிருந்து வரும் நிலையில்  மதியம் முதல் இரவு வரை ஐடி நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பணிக்கு வந்த புவனேஷ் நள்ளிரவு 12 மணி அளவில் டீ கடைக்கு சென்று நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் அலுவலகம் திரும்பிய அவர் திடீரென பத்தாவது மாடிக்கு சென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜன்னலை திறந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். முதல் கட்ட விசாரணையில் அவருக்கு 30 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் கடன்காரர்கள் நெருக்கியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments