தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு- வானதி சீனிவாசன்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (12:21 IST)
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது  என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறையில் உள்ள  சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, பாஜக அலுவலகம், தற்போது கோவில் வரை பெட்ரோல் வெடி குண்டு வீச்சுகள் தொடர்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது.
 
சட்டம் ஒழுங்கு பற்றி மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வரும் திமுக அமைச்சர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments