Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா... நடக்காதா...? முடிவு எப்போது...

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (16:44 IST)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை ஜூன் 11-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். 
 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் ஏராளமான பெற்றோர்களும் இந்த தேர்வை நடத்த வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். 
 
லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா?  
 
9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது என்றும், 9 லட்சம் மாணவர்கள் மட்டுமின்றி 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளது.   
 
அதோடு ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது எனவும், எனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.  
 
மேலும், ஜூலை 2வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்தலாமா என்பது குறித்து மதியம் 2.30 மணிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. 
 
அதன்படி 2.30 மணிக்கு நடந்த விவாதத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுபேற்பது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை.
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளது.
 
மேலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை ஜூன் 11-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments