Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு குறைவான நிதி அளித்தது ஏன்? - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (14:53 IST)
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழகத்திற்கு மிகவும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளன.

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசிலிருந்து தமிழகத்திற்கு ரூ.510 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை விட குறைவான பாதிப்புகள் உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments