Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பாகமாக பிரிக்கப்பட்ட சென்னை, 400 செக்போஸ்ட்: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (06:56 IST)
100 பாகமாக பிரிக்கப்பட்ட சென்னை, 400 செக்போஸ்ட்:
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து சென்னையில் பயங்கர கெடுபிடிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டியுள்ள நிலையில் அதில் பெரும்பாலானோர் சென்னையில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையை 100 பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்திற்கு நான்கு செக்போஸ்ட் என மொத்தம் 400 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது
 
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இன்னும் 12 நாட்களுக்கு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் வந்தாலே போலீசாரின் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். சரியான பதில் அளிக்கவில்லை கடும் நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த சென்னையில் மொத்தம் 20 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் செக் போஸ்ட்களில் இரவு பகல் என 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடுமையான சோதனைகள் போலீசார் ஈடுபட இருப்பது மட்டுமின்றி ட்ரோன் மூலமும் மக்கள் வெளியே நடமாடுவதை போலீசார் கண்காணித்து வருவதால் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments