Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் சரவண பவன் மீதான ‘சீல்’ வைப்பு நடவடிக்கை - 9 கிளைகள் மூடல்

Advertiesment
தொடரும் சரவண பவன் மீதான ‘சீல்’ வைப்பு நடவடிக்கை - 9 கிளைகள் மூடல்
, வியாழன், 2 பிப்ரவரி 2017 (15:42 IST)
முறையான உரிமம் இல்லாததால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சரவண பவன் ஹோட்டல் உட்பட 9 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 

பொதுமக்கள் மத்தியில் கடந்த 30 வருடங்களாக தரமான உணவுகள் வழங்குவதில் முதலிடம் பிடித்திருந்த ஒரே நிறுவனம் ஹோட்டல் சரவண பவன் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

1981ஆம் ஆண்டு தொடங்க இந்த நிறுவனம் இந்தியாவிற்குள் 30க்கும் மேற்பட்ட கிளைகளும், இந்தியாவிற்கு வெளியே 40க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் இயங்கி வந்த சரவண பவன் கிளையை பார்வையிட்ட மாநகராட்சி அதிகாரிகள், உரிமம் இல்லாமல் விதிகளை மீறி இயங்குவதாக கூறி உணவகத்திற்கு சீல் வைத்தனர். அதேபோல் சென்னையில் இயங்கிவரும் மேலும் 8 கிளைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒசாமா பின்லேடன் படத்தை நான் பார்க்கவில்லை - விஜயகாந்த்