Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவில் இருந்து தப்புமா தலைநகரம்??

Advertiesment
கொரோனாவில் இருந்து தப்புமா தலைநகரம்??
, திங்கள், 1 ஜூன் 2020 (11:11 IST)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 1149 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,149 பேர்களில் சென்னையில் மட்டும் 804 பேர் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1798, தேனாம்பேட்டையில் 1662, தண்டையார்பேட்டையில் 1661, அண்ணா நகரில் 1237, அடையாறில் 834, வளசரவாக்கத்தில் 871 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவச உணவை நிறுத்திய சென்னை அம்மா உணவகங்கள்!