Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசுபிசுத்த ஐபிஎல் போராட்டம், கேலரிகள் நிரம்பிய சேப்பாக்கம்

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (08:23 IST)
நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்த தமிழகத்தில் உள்ள லட்டர்பேட் கட்சிகளும், ஒருசில திரையுலகினர்களும்  போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டம் காரணமாக சென்னை மைதானத்தில் கூட்டம் இல்லாமல் காலியாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆரம்பத்தில் மைதானத்தின் கேலரிகள் காலியாக இருந்தது உண்மைதான். ஆனால் நடந்தது வேறு: கிரிக்கெட் ஆர்வலர்கள் மைதானத்தில் குவிந்து சேப்பாக்கம் ஸ்டேடியத்தையே நிரப்பினர். 
 
ஐபிஎல்-க்கு எதிரான போராட்டம் முடிந்த பின்னர் சென்னை அணி பேட்டிங் செய்யும்போது மைதானம் நிரம்பி வழிந்தது. சென்னை அணி வீரர்கள் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்களிடம் இருந்து எழுந்த கோஷங்கள் சில கிலோமீட்டர் வரை கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 டிக்கெட் வாங்கிய 95% போட்டியை பார்க்க வந்ததாகவும், போட்டியின் இடையே சிறுசிறு சம்பவங்களை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments