Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து
, வெள்ளி, 6 மே 2016 (12:14 IST)
ஆவடி அருகே ஏற்பட்ட ரயில் விபத்தையடுத்து திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.


 


சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே வழித்தடத்தில் மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ரயில் விபத்தில் இருந்து மீட்பு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.  இந்நிலையில் திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரெயிகளும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது. சென்னை - அரக்கோணம் மார்க்கத்திலும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை மட்டும் மின்சார ரெயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடத்தல் தங்கத்தை கடத்திய ராணுவ கர்னல் மற்றும் வீரர்கள் கைது