Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை செண்ட்ரல் – அரக்கோணம் இடையே ரயில்கள் ரத்து? – முழு விவரம் உள்ளே!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (09:15 IST)
சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேரங்களில் மாற்றம் மற்றும் பகுதியாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



ரயில் தளவாட பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை செண்ட்ரல் – அரக்கோணம் மின்சார ரயில்கள் நேரத்தில் மாற்றம் மற்றும் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, மூர் மார்க்கெட் – ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

சென்னை பீச் – அரக்கோணம் நள்ளிரவு 1.20 மின்சார ரயில் ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – ஆவடி இரவு 11.55 மின்சார ரயில் ஜூன் 8ம் தேதி முழுமையாக ரத்து

மூர் மார்க்கெட் – ஆவடி இரவு 11.30 மற்றும் 11.45 ரயில் 8ம் தேதி முழுமையாக ரத்து

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – செண்ட்ரல் 9.50 மணி ரயில் 8ம் தேதி ஆவடி – செண்ட்ரல் இடையே பகுதியாக ரத்து

அரக்கோணம் – வேளச்சேரி அதிகாலை 4 மணி ரயில் 7,8,9 தேதிகளில் அரக்கோணம் – சென்னை பீச் இடையே பகுதியாக ரத்து

பட்டாபிராம் – வேளச்சேரி இரவு 8.25 மணி ரயில் 9ம் தேதி ஆவடி – சென்னை கடற்கரை இடையே ரத்து

வேளச்சேரி – பட்டாபிராம் இரவு 10.30 மணி ரயில் 8ம் தேதி சென்னை பீச் – பட்டாபிராம் இடையே பகுதியாக ரத்து.

பட்டாபிராம் – சென்னை செண்ட்ரல் இரவு 10.45 மணி ரயில் 8ம் தேதி ஆவடி – செண்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments