Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை போக்குவரத்து… 10 நாளில் ஒரு கோடி பேர் பயணம் – கலெக்‌ஷன் எவ்ளோ தெரியுமா?

சென்னை போக்குவரத்து… 10 நாளில் ஒரு கோடி பேர் பயணம் – கலெக்‌ஷன் எவ்ளோ தெரியுமா?
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:58 IST)
ஊரடங்குக்குப் பின் சென்னையில் பேருந்து சேவை தொடங்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் தொடங்கியது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக பேருந்தில் முதலில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. ஆனால் அதன் பிறகு கணிசமான அளவில் கூட்டம் அதிகமானது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று காலை வரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு கலைஞரின் பெயர்?