Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி.. விமான அட்டவணையில் மாற்றம்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:55 IST)
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை அடுத்து, விமான நிலைய அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை விமான அட்டவணையில் மாற்றம் செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
இன்று பிற்பகல் 1:45 முதல் 3:15 மணி வரை சென்னை விமான நிலைய வான் தடம் மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் வான் தடம் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், பயணிகள் தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு எந்தெந்த விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை குறிப்பாக தெரிந்து, தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி, வான் சாகச நிகழ்ச்சியை காண ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments