Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய கூட்டணியா?

Advertiesment
சென்னையில் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக தேசிய கூட்டணியா?
, வெள்ளி, 9 நவம்பர் 2018 (19:50 IST)
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சற்றுமுன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வருகை தந்தார். அவரை ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்முகத்துடன் வரவேற்றனர்.

இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பது குறித்து, ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

webdunia
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழகத்தில் திமுக, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் மெய்நிகரி செய்தி வாசிப்பாளர்...