Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (19:24 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை  காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தில், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,சேலம்,  ஈரோடு, கோவை,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருது நகர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments