Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

Siva
செவ்வாய், 26 நவம்பர் 2024 (14:24 IST)
சென்னையில் தொழிலதிபர், ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அரசின் அதிகாரி ஆகிய மூன்று பேரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சேகர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அதேபோல், மயிலாப்பூரில் உள்ள ஓய்வு பெற்ற துறைமுக இணை இயக்குநர் புகழைந்து என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
இதனை அடுத்து, அயப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேற்கண்ட மூவரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றதாகவும், வீட்டிலிருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சோதனை எந்த வழக்கிற்காக நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதற்கான விவரங்கள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

வைகை, பல்லவன், வந்தே பாரத் ரயில்கள் ரத்து.. பயணிகள் கடும் அதிருப்தி..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தரிசனத்திற்கு வரும் பிரபலங்கள் அரசியல் பேசக்கூடாது: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments