Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகிலனைக் காணவில்லை – சிபிசிஐடி அறிவிப்பு !

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (16:22 IST)
காணாமல் போன முகிலனைப் பற்றி துப்புக்கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தோடு சேர்ந்து தமிழகக் காவல்துறையினர் அப்பாவிப் பொதுமக்களை எப்படி சுட்டு வீழ்த்தினர் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார் முகிலன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாகவும் முகிலன் அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு  சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய முகிலன் காணாமல் போயுள்ளார். ஆனால் அவர் வாட்ஸ் ஆப்பில் இரவு 11 மணிவரை ஆன்லைனில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

முகிலன் காணாமல் போனதை அடுத்து முகிலனுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து முகிலனுக்கு எதிரிகள் யாரும் இல்லை எனவும் ஆலைக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டதால் மட்டுமே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்ற்ச்சாட்டு வைத்தனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

முகிலன் காணாமல் போய் கிட்டதட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் சிபிசிஐடி போலிஸார் முதன் முதலாக அவரைக் காணவில்லை என்று அவரதுப் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸை ஒட்டி அவரைப் பற்றிய தகவல்களை தெரிவிப்போருக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் கையில் சிக்கிய விமானி அபிநந்தனையே 2 நாட்களில் மீட்டெடுத்த இந்தியா தனது உள்நாட்டிலேயே ஒரு சமூகப் போராளியை ஒரு மாதமாகக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்து வருவது பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments