Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை கூடுகிறது.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:14 IST)
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை மறுநாள் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்க இருந்த நிலையில் இந்த கூட்டம் நாளையே நடப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு நாளை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு மனு அளித்துள்ளது. இந்த மனுவும் விசாரணை செய்யப்படவுள்ளது.
 
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி  காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் கூடிய நிலையில் தமிழகத்திற்கு  விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு நாளைய கூட்டத்தில் உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments