Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய உதவி ஆணையர் கைது செய்யப்படுவாரா?

Advertiesment
சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய உதவி ஆணையர் கைது செய்யப்படுவாரா?
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (15:21 IST)
சென்னையில் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய கமீல் பாஷா மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
 
கடந்த வாரம் 12-ம் தேதி இரவு 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குழு, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்சாவின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ.  2.5 லட்சத்தை கைப்பற்றினர். அப்போது, அந்த அறையில் கமீல் பாட்சாவை சந்திப்பதற்காக கொடுங்கையூரை சேர்ந்த பில்டர் செல்வம் என்பவர் வந்திருந்தார். அவரிடமிருந்து ரூ.2.58 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டட்து. எனவே, மொத்தம் ரூ.5.8 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியது.
 
இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான்கான் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!