Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல சினிமா இயக்குநர் மீது வாகனம் மோதி விபத்து...

பிரபல சினிமா இயக்குநர் மீது வாகனம் மோதி விபத்து...
, வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:32 IST)
இன்று காலையில் நடைபயிற்சி சென்ற பிரபல இயக்குநர் சுசீந்திரன் மீது வாகனம் மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிலா கபடிக் குழு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் சுசீந்தரன். அதன்பிறகு அவர் ’பாண்டியநாடு’, ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார்.
 
இந்த நிலையில், இன்று காலையில் நடைபயிற்சிக்கு சென்ற சுசிந்தரன் மீது ஒரு வாகனம் மோதியது.,இந்த சம்பவ இடத்திலேயே கீழே விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 
 
இந்த விபத்தில் அவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 
webdunia
சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் 'சாம்பியன்' என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேல் சபையை கலைக்க ஜெகன் மோகன் அரசு முடிவு??