Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன்

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (17:07 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக கொண்டாடப்பட்டு வருகிறது வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளைக் குளிப்பாட்டி அலங்கரித்த விவசாயிகள், அவற்றிற்கு பழங்கள், பொங்கலை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். 
 
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், தற்பொழுது உடல் நிலை தேறிய நிலையில், மாட்டுப் பொங்கலை தனது வீட்டில் உள்ள பசுக்களுக்குப் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது டிவிட்டர் பதிவில், "எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா, அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரைப் பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்." என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments