Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்கலைன்னா ஓட்டு போட முடியாது ! கை நடுக்கம் வரும் - குடிகாரரின் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (16:10 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு இன்று முதல் (16,17,18 ) முன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்  ஒரு நபர் தேர்தலுக்கு மதுபானக் கடைகள்  மூடுவதால் கைநடுக்கம் வரும் என்று பேசி பேஸ்புக் பக்கத்தில்  ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
’’நீங்க எலக்சனுக்கு மூனு நாள் மதுபானக் கடையை லீவு விடறீங்க.. மதுபானக் கடைக்கும் , எலெக்சனுக்கும் என்ன சம்பந்தம் ? நான் எலக்சன் அதிகாரிய பாத்துக் கேட்கறேன: எனக்குக் குடிக்கைலன்னா கையில் நடுக்கம் வரும். தேர்தல் அப்ப படபடன்னு எதாவது மாத்தி பண்ணீருவேன், அதனால் தேர்தல்ல ஓட்டு மாத்தி போட்டுறுவோம்.  நாங்க நெனச்சவங்களுக்கு ஓட்டு போட  முடியாது. இது என்ன மாதிரி உள்ள குடிகாரங்க சங்கம் சார்பா கேட்கறேன் ’’என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

நன்றி சங்கர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments