Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்தன: மூன்று பேர் பலி

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (11:18 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்கு அடுத்துள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியே சூளகிரி என்ற பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  அந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றுமொரு அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதியது. பின்பு அந்த பேருந்தும் விபத்திற்குள்ளானது.

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த பேருந்து விபத்தில்,  ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் பத்து பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments