Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொய்க்கணக்கில் இழுபறி… மகனை முதலிரவுக்கு விடாமல் தடுத்த தந்தை – கொலையில் முடிந்த சண்டை !

மொய்க்கணக்கில் இழுபறி… மகனை முதலிரவுக்கு விடாமல் தடுத்த தந்தை – கொலையில் முடிந்த சண்டை !
, திங்கள், 17 ஜூன் 2019 (11:54 IST)
அரியலூர் மாவட்டத்தில் மொய்க்கணக்கில் இழுபறி ஏற்பட்டதால் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சண்டையில் தந்தையை அடித்துக்கொன்றுள்ளார் மகன்.

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த இளமதி எனும் இளைஞருக்கு நேற்று முன் தினம் சிறப்பாக திருமணம் முடிந்துள்ளது. திருமனத்தன்று இரவு வீட்டில் மனமகனும் அவரது தந்தை சண்முகமும் மொய் வரவு செலவுக் கணக்கை பார்த்துள்ளனர்.

மொய்க்கணக்கு இடிக்கவே தந்தைக்கு மகன் மேல் சந்தேகம் வந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையில் முதலிரவுக்கு நேரம் ஆகவே மகன் இளமதி கிளம்பியுள்ளார். ஆனால் அவரை மறித்த சண்முகம் கணக்கை சரிசெய்த பின்பே முதலிரவு என அடம் பிடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆரம்பித்துள்ளது.

கோபமான மகன் இளமதி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து தந்தையைத் தாக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது சண்முகத்தின் இரண்டாவது மகன் அளித்த புகாரின் பேரில் மனமகனைப் போலிஸ் கைது செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிடுக்கு பிடி பிடித்த ஆக்டோபஸ்:திணறிய நீச்சல் வீரர்