Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதியக் கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு - பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (19:57 IST)
பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா பிராமண சமூகத்தைப் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,   பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா பிராமண சமூகத்தைப் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹரியானா மாநிலம் ஹிசர் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா,  தேர்தல் பிரசாரத்தின்போது, சமூகத்தை சாதிகளாகப் பிரித்தது பிராமணர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை சாதியக் கொடுமைகளுக்குப் பிராமணர்களே பொறுப்பு என்று பேசியிருந்தார்.
 
இது சர்ச்சையான நிலையில், இக்கருத்திற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவரைத் தோற்கடிக்க பிராமணர்கள்  ஒன்று சேர வேண்டும் என சபா கோரிக்கை விடுத்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments