Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:30 IST)
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள அழகம்மன் கோவிலில் கடந்த 26ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அங்கு சென்ற சிலர், அருகேயுள்ள மணப்பாடு கடற்கரைக்கு சென்று, படகு சவாரி செய்ய விரும்பினர்.


 

 
இதற்காக ஒரு மீன்பிடி விசைப்படகில் 20 பேர் ஏறி சென்றனர். கடற்கரையிலிருந்து  சுமார் 1 கி.மீ தூரம் சென்ற போது, திடீரெனெ எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு தடுமாறி கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழிந்து தத்தளித்தனர். இது கேள்விப்பட்டு, கடற்கரையிலிருந்து சிலர் படகில் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 19 பேரை மீட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
 
அதில் சிகிச்சை பலன்றி ஏற்கனவே 9 பேர் இறந்துவிட்டனர். மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   இந்நிலையில்  அதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
 
அளவுக்கு அதிகமானோர் அந்த படகில் ஏறியதும், அனைவரும் ஒரே பகுதியில் நின்று கொண்டிருந்ததாலும், திடீரென எழுந்த ராட்சத அலை காரணமாக படகின் சுமை ஒரு பக்கமாக அதிகரித்து கவிழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments