Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வேட்டியை உருவி விரட்டியடித்த மக்கள்! (வீடியோ இணைப்பு)

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வேட்டியை உருவி விரட்டியடித்த மக்கள்! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:07 IST)
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை அதிரடியாக கட்சியில் இருந்து தூக்கினார் சசிகலா. இதனையடுத்து அதிமுகவில் வனத்துறை மற்றும் அதிமுக பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டது.


 
 
இதனையடுத்து அதிமுக சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு  தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
 
கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள், தங்கள் விருப்பத்தை மீறி சசிகலாவுக்கும், அவரது  கைப்பாவையான எடப்பாடிக்கும் ஆதரவு அளித்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு  ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் யாரும் தொகுதி உள்ளே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

நன்றி: நக்கீரன்
 
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் தன் தொகுதிக்கு திரும்பினார். அப்போது மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஊருக்குள் வந்த அவரது காரை சுற்றிவளைத்து மக்கள் கோஷமிட்டனர். கூட்டத்தில் இருந்த ஒருவர் சீனிவாசனின் வேட்டியை  பிடித்து இழுத்ததில் பதற்றமடைந்த சீனிவாசன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்றார்.
 
பொதுமக்கள் மத்தியில் சிக்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொதுமக்கள் தள்ளிவிட்டு அடிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக அமைச்சரவையில் முதல்வார் பழனிச்சாமிக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் இருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கே இந்த நிலைமையா என அதிமுகவின் மற்ற எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் கதிகலங்கி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments