தேர்தலில் வியூகம் அமைப்பதில் பாஜகவை மிஞ்ச முடியாது என்பது தெரிந்ததே. தேர்தலுக்கு முன்னரும் சரி தேர்தலுக்கு பின்னரும் சரி அதிரடி நடவடிக்கை எடுப்பதும் அமித்ஷாவின் மூளையில் உதிக்கும் திட்டங்களும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக தேர்தலில் அமித்ஷா தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார். அதிமுகவிடம் 20 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் குறைந்தது 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பாஜக வைத்துள்ளதாம்
அதுமட்டுமின்றி திமுக உள்பட எந்த கட்சியில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை உடனடியாக பாஜகவுக்கு தூக்கி கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவில் அதிமுகவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்கள், சீட் கிடைக்காமல் ஏமாற்றத்திற்கு உள்ளானவர்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அதிமுக தலைமையே சற்று அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் பாஜகவின் முதல் இலக்கு திமுக தான் என்றும் திமுகவில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்து ஒவ்வொருவராக தூக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது