Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் டீலிங் முடித்த டிடிவி... தேர்தலுக்குள் அதிமுக - அமமுக இணைப்பு?

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (11:49 IST)
தேர்தலுக்குள் அதிமுக - அமமுக இணைக்கப்படும் எனவும் இதனை பாஜக செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன.  
 
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது. 
 
இதனிடையே டெல்லிக்கு டிடிவி சென்றதன் பிறகு அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முற்படவுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. அதாவது தேர்தலுக்குள் அதிமுக - அமமுக இணைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments