Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவில் சசிகலா இணைப்பு... ஜகா வாங்கிய அமைச்சர்!

Advertiesment
அதிமுகவில் சசிகலா இணைப்பு... ஜகா வாங்கிய அமைச்சர்!
, புதன், 23 செப்டம்பர் 2020 (10:39 IST)
சசிகலா இணைப்பு குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. 
 
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.
 
இந்நிலையில் சசிகலா அதிமுகவில் இணைப்படவுள்ளார், தேர்தலுக்குள் அதிமுக - அமமுக ஒன்றிணைக்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது. அதிமுகவில் நான் ஒரு சாதரண தொண்டன் என பதில் அளித்து தப்பித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது? பேராசிரியர்கள் ஆளுநருக்குக் கடிதம்!