Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி துணை முதல்வராவதில் தவறில்லை: பாஜக மாநில துணைத் தலைவா் கருத்து..!

Mahendran
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (10:32 IST)
உதயநிதி துணை முதல்வர் ஆவதில் தவறில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியபோது ’உதயநிதி துணை முதல்வராவதில் எந்த தவறும் இல்லை, தமிழக மக்கள் அதையும் பார்க்கட்டும் என்று தெரிவித்தார்.
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து திமுகவை அகற்றுவதுதான் பாஜகவின் லட்சியம் என்றும் அதை நோக்கி பயணம் செய்வோம் என்றும் அவர் கூறினார். திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
மக்கள் விரோத செயல்களை திமுக அரசு செய்து வருகிறதுஎன்றும் மக்களை திசை திருப்பவே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பொய் கூறி போராட்டம் நடத்தி வருகிறது என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments