Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சமி நில விவகாரத்தை மறக்கடிக்க முயல்கிறாரா ஸ்டாலின்? – பாஜக கேள்வி!

Advertiesment
பஞ்சமி நில விவகாரத்தை மறக்கடிக்க முயல்கிறாரா ஸ்டாலின்? – பாஜக கேள்வி!
, வியாழன், 31 அக்டோபர் 2019 (11:19 IST)
ஆழ்துளை கிணற்றில் சிக்கி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை ஸ்டாலின் குறை கூறுவது பஞ்சமி நில விவகாரத்தை மறைப்பதற்காகவா என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சி அருகே குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது. இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ”அதிமுக அரசு குழந்தை சிக்கிய விபத்தில் சரியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் எதிர்வினையாற்றி இருந்தார்கள். மேலும் ஸ்டாலின் குழந்தை இறந்த விபத்தை அரசியலாக்க முயல்கிறார் என்று பலரும் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ள தமிழக பாஜக ” உப்பு பெறாத விஷயங்களை தோண்டி எடுத்து வந்து பரபரப்பாக்க முயல்வதும், குழந்தையின் சாவில் ஆதாயம் தேடி ஊடகங்களில் தனக்கு ஆதரவாக கருத்து திணிக்க வைப்பதும் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்கிறது முரசொலி பஞ்சமி நில விவகாரத்தை திசை திருப்பவா, இல்லை தேர்தல் தோல்வியை மறக்கடிக்க செய்யவா” என்று பதிவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”மஹா”வால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை..