Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவுக்கு பாஜக அமைச்சர் பாராட்டு

ஜெயலலிதாவுக்கு பாஜக அமைச்சர் பாராட்டு

Advertiesment
ஜெயலலிதாவுக்கு பாஜக அமைச்சர் பாராட்டு
, திங்கள், 20 ஜூன் 2016 (16:00 IST)
தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

 
நாகர்கோவிலில், மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது,  தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். 
 
அதன்படி, தற்போது 500 மதுக்கடைகளை மூட முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரது செயல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
அதே நேரத்தில், பூரண மதுவிலக்கை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளையர்களை பிடிக்கும்போது இறந்த ஏட்டுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு