பாஜக ஆர்.சிபி போல.. தோற்றுக்கொண்டே இருக்கும்.. அதிமுக சிஎஸ்கே மாதிரி: ஜெயக்குமார்

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (14:28 IST)
பாஜக ஆர்சிபி அணியை போல அது தோற்றுக்கொண்டே இருக்கும், ஆனால் அதிமுக, சிஎஸ்கே அணி போல் தோற்றாலும் மீண்டும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இரு கூட்டணிகளும் படு தோல்வியை சந்தித்துள்ளன. இந்த தோல்விக்கு பிறகும் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜக, ஆர்சிபி அணி போல தோற்றுக் கொண்டே இருக்கும். ஆனால் அதிமுக சிஎஸ்கே மாதிரி, தோற்றாலும் மீண்டும் எழுந்து வரும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை ஒரு புள்ளி ராஜாவைப் போல் மாறிவிட்டார் என்றும் தேர்தல் முடிவு வெளியானதும் யார் யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் என்று ஒரு ஐபிஎஸ் ஆபீஸ் நடந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

கன்னியாகுமரியில் பாஜக வலுவாக இருக்கிறது என்று சொன்னார்கள், ஆனால் அங்கேயும் தோல்வி அடைந்தது. அதேபோல் தர்மபுரியில் பாமக வலுவாக இருக்கும் என்று சொன்னார்கள், அங்கேயும் தோல்வி அடைந்து விட்டது.

எனவே தோல்விக்கு பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர மற்ற கட்சியை குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது என்று அண்ணாமலைக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments