Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலின் மொத்த உருவமே நீங்கதான்!? – திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:51 IST)
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்தது பாஜக நிர்வாகி என்று திமுக பதிவிட்டதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது பாஜக.

திருச்சியில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் திருடர் கும்பல் ஒன்று கொள்ளையடித்தது. இதுகுறித்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் திருவாரூரை சேர்ந்த முருகன், மணிகண்டன் ஆகியோர் பிடிப்பட்டனர். இந்நிலையில் திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டன் பாஜக நிர்வாகி என்று திமுக ஆதரவு ட்விட்டர் பக்கம் ஒன்று பதிவிட்டுள்ளது.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா ஷேர் செய்துள்ளார். இது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ட்விட்டர் பதிவை ஷேர் செய்த பாஜக அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் “கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் @arivalayam -த்தின் உடன்பிறப்புகள்

@TRBRajaaபா.ஜ.க ஆதரவாளர்களை சமூகத்தில் கொச்சைப்படுத்தும் நோக்கில், தங்கள் பெயர் அடிபடாமல் வழக்கை திசை திருப்ப, பொய்யான தகவல்களை பரப்புவது வாடிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருட்டு குற்றத்தில் ஈடுபட்டவர் பாஜகவினர் என திமுகவினர் கருத்து கூறியிருப்பது இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments