Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக-காங்கிரஸ்: வித்தியாசமான தேர்தல் முடிவு!

Advertiesment
அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக-காங்கிரஸ்: வித்தியாசமான தேர்தல் முடிவு!
, வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:07 IST)
கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலின் முடிவுகளில் பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. 21 வயது, 23 வயது கல்லூரி பெண்கள் முதல் 79 வயது 82 வயது முதிய பெண்கள் வரை வெற்றி பெற்ற சுவாரசியமான சம்பவங்களும், முதன்முதலாக ஒரு திருநங்கை வெற்றி பெற்ற சம்பவமும், நடைபெற்றது 
 
மேலும் முன்னாள் ஊராட்சித் தலைவரின் இரண்டு மனைவிகள் வெற்றி பெற்றதும், முன்னாள் அமைச்சரான அன்வர்ராஜாவின் மகனும் மகளும் தோல்வி அடைந்ததும் என பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்  தமிழகத்தில் பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்ற நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் பின்னுக்கு தள்ளியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது\
 
இம்மாவட்டத்தில் பாஜக 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக காங்கிரஸ் 24 கவுன்சிலர்களையும் திமுக 21 கவுன்சிலர்களையும் அதிமுக 16 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது
 
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மாநிலக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் திராவிட கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு தேசியக்கட்சிகள் முதலிடம் பிடித்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பரிசு ஜனவரி 9 - 12 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் ! தமிழக அரசு