Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் தமிழர்களை தாக்கிய சம்பவம்: பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது..!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (13:42 IST)
திருப்பூரில் தமிழர்களை தாக்கிய சம்பவம்: பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது..!
திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட இந்திய இளைஞர்கள் தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
திருப்புர் அனுப்ப பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரை சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது.
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார்,  பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக இளைஞர்கள் சிலரையும் போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments