இறந்த மகனின் வங்கி கல்வி கடனை செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக கனரா வங்கியில் ரூபாய் 2 லட்சம் கல்விக்கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் இவர் படிப்பு முடிந்த நிலையில் சமீபத்தில் அவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்
இந்த நிலையில் அரவிந்த் வாங்கிய கல்வி கடனை செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் அவருடைய பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ரூபாய் 2 லட்சம் கல்வி கடன் மற்றும் வட்டி சேர்ந்து மற்றும் 4 லட்சம் கட்ட வேண்டும் என்று அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்தன் பெற்றோருக்கு சமன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.